எண்ணங்களைப் பிரதிபலிக்கும் உடல் அசைவுகள்!உடல்மொழி

பெரியோர் இருக்குமிடத்தில் பேசும்போது நம் வாதங்களை முகத்தில் அடிப்பது போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்கவேண்டும்
அவ்வையார் (நடைமொழி)

‘டாண்டுவான்’ என்ற பெயரில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பரிட்சார்த்த முறையில் தயாரித்த குறும்படம்தான் உலகின் முதல் திரைப்படம். அது 1926ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகுதான் சினிமா பேசத் தொடங்கியது.முதல் பேசும் படம் ‘தி ஜாஸ் சிங்கர்’ அது 1927ம் ஆண்டு வெளியானது.

அன்றைய காலகட்டங்களில் திரைப்படங்கள் இப்போது இருப்பது போல் பேசும் படம் வகையைச் சார்ந்ததாக இருக்கவில்லை, மௌனமொழியில்தான் இருந்தது. பேச்சுகளற்ற, வசனங்களற்ற மௌனப் படங்கள் (ஊமைப்படம்) வகையாக இருக்க முக்கியக் காரணம் அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு ஒலிகளைப் பதிவு செய்யும் தொழில்நுட்பம் தோன்றாமல் இருந்ததுதான்.

அப்படியான காலகாட்ட திரைப்படங்களில் நடிகர்களின் வாயசைவுகளையும், பார்வைகளையும், அங்க அசைவுகளையும் பார்த்தே கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், மன ஓட்டத்தையும் பார்வையாளர்கள் புரிந்துகொண்டார்கள். அதைக் கொண்டே மௌனப் படங்கள் பொழுதுபோக்கின் உச்சமாக மக்களிடம் கோலோச்சிக் கொண்டிருந்தன.

மௌனப் படங்களின் காலகட்டத்தில்தான் Charlie Chaplin , Buster Keaton ஆகியோர்\\I  முன்னோடி நட்சத்திரங்களாகத் திகழ்ந்தார்கள். உடல் அசைவுகளையும் சைகைகளையும் காட்டி வசீகரிக்கும் அளவுக்கு ஒரு நடிகர் எப்படி வெளிப்படுகிறாரோ அதைக்கொண்டே நடிகரது திறமை பாராட்டப்பட்டது, புகழப்பட்டது. சினிமா பேசத் தொடங்கியதும் (பேசும் படங்கள் வெளியானதும்) உடலசைவுகளோடு முக வசீகரமும், வசனம் பேசும் திறனும், உச்சரிப்புத் தெளிவும் கொண்டிருந்த நடிகர்கள் முக்கியத்துவம் பெற்று புகழின் உச்சிக்கு சென்றார்கள்.

இந்தப் புரிதல்தான் உடல்மொழி குறித்தான அறிதலுக்கும் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.  ஒருவரை நேருக்கு நேர் பார்க்கும்போது அவருடைய அங்க அசைவுகளிலும், முகபாவனைகளிலும், குரல் தொனியிலும், சைகைகளிலுமே ஒட்டுமொத்தமாக உடல்மொழி வெளிப்படுகிறது. பேச்சு ஒலிக்கு அடுத்து வார்த்தைகளற்ற சைகைகள், அபிநயமான வெளிப்பாடுகள் என்ன சொல்கின்றன என்ற புரிதலோடு அணுக வேண்டியது அவசியம். உடல்மொழியை அறிந்துகொள்வதால் ஆளுமைத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். உறவுகளையும், நட்புகளையும் சீரான முறையில் வளர்த்துக்கொள்ள முடியும்.

குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகுதான் வாய் திறந்து குரல் மூலம் ஒலிகளை பேச்சாக (தாய்மொழியில்) உச்சரிக்கத் தொடங்குகிறது. ஆனால் குழந்தை தனது உடலை அசைக்கத் தொடங்கிய நொடி முதலே உடலியல் ரீதியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தொடங்கிவிடுகிறது (வெளிச்சத்தை/சத்தத்தை நோக்கி நகர்வது).மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அவரது மனோபாவத்தையும், எண்ண ஓட்டத்தையும் அறியும் திறமை பேச்சுமொழிகள் வருவதற்கு முன்பே தொடர்பு ரீதியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மனிதன் முதன் முதலாக மொழியை எப்போது உச்சரித்து பேசத் தொடங்கினான் என்ற ஆராய்ச்சி இன்றளவும் நடந்துகொண்டே இருக்கிறது. மனித இனம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தனது எண்ணங்களையும், அங்க அசைவுகளின் மூலம் தகவல்களையும் வெளிப்படுத்தியிருந்தாலும், அதை ‘உடல்மொழி’ என்று வகைப்படுத்தி, அதுபற்றிய ஆய்வுகள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது.

‘உடல்மொழி’ என்ற ஒன்றைப் பற்றிய விழிப்புணர்வே ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இருந்தபோதும் இன்றளவும் பேச்சுமொழிதான் (ஓசை சார்ந்த) மனிதர்களுக்குள் முக்கியமான தகவல் தொடர்பாக மக்கள் எண்ணுகிறார்கள்.  இதற்கும் உளவியல்தான் காரணம் என்கிறார்கள்  மானுடவியலாளர்கள். மனிதனிடம் தகவல் தொடர்பின் பாகமாக பேச்சுமொழி பரிணாம அளவுகோலின்படி 10-20 லட்சம் ஆண்டு களுக்குள்தான் (சமீபகாலம்) வளர்ந்து
வந்துள்ளது.  அதன் மூலமாகவே தகவல்களையும், எண்ணங்களையும் முக்கியமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

பேச்சின் தொடக்கத்திற்கு முன் மனிதன் பறவைகளின் ஒலியையும், விலங்குகளின் சப்தத்தையும் கேட்டு அதுபோலவே திரும்ப ஒலி எழுப்பியும் அங்க அசைவுகளை காட்டியுமே தகவல்களைப் பரிமாறியிருக்கிறான் என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இந்தக் காலகட்டத்தில்தான் உடலியல் ரீதியாக மனிதனின் மூளை மும்மடங்காக பெரிதாகியிருக்கிறது.

பேச்சு வருவதற்கு முன் உடல்மொழியும், உடலின் அங்கங்களைக் கொண்டு உண்டாக்கும் சப்தங்களும்தான் மனித உணர்வுகளை வெளிப்படுத்த முக்கியமாக உதவியிருக்கிறது. இதில் ஓர் ஆச்சர்யம் என்னவென்றால், ஆதி மனிதன் தகவல் தொடர்புக்கு தனது அங்க அசைவுகளைப் பயன்படுத்தியது இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.பேச்சு மொழியின் இனிமையாலும், வசீகரத்தாலும், உடல் மொழியின் வெளிப்பாட்டை கவனிக்கத் தவறுவதோடு, அதன் முக்கியத்துவத்தையும், உணர்த்தும் செய்தியையும் புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுகிறோம்.

உடை வழி - லுங்கி

லுங்கி ஆசிய துணைக்கண்டத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் முக்கியமான உடையாக உள்ளது. வேட்டியின் பரிணாம வளர்ச்சியே லுங்கியாக உருமாறியிருக்கிறது. வண்ணங்களிலான செவ்வக வடிவ துணியின் இரு முனையையும் மூட்டி லுங்கி என்று பெயரிட்ட பெருமை தமிழனையே சேருகிறது.லங்கோடு (ஆண்களின் உள்ளாடை) உடையின் நீட்சிதான் லுங்கி என்ற கருத்தும் உண்டு.

லுங்கியை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, மியான்மர், தாய்லாந்து போன்ற  நாடுகளில் ஆண்கள் வீட்டில் அணியும் பிரத்தியேக உடை. (சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு) ஆசிய கண்டம் முழுக்க இதை Sarong என்றும் குறிப்பிடுகிறார்கள். (நம்ம ஊரில் லுங்கியை ‘சாரம்‘ என்று குறிப்பிடுவதும் இதன் காரணமாக இருக்கலாம்). மூட்டப்பட்ட லுங்கியை அதன் ஓரங்களை இழுத்து வயிற்றின் மையப்பகுதிக்கு கொண்டுவந்து (Double twist செய்து) சொருகியோ, முடிச்சோ போட்டுக்கொள்ள வேண்டும்.

இதுதான் லுங்கியை அணியும் முறை. பங்களாதேஷில் லுங்கி தவிர்க்க முடியாத முக்கியமான உடை. அங்கு திருமணத்தின்போது ‘மாப்பிள்ளை‘ லுங்கியில்தான் இருப்பார். பங்களாதேஷில் லுங்கி loni என்ற பெங்காலி வார்த்தையிலிருந்து வந்தது என்று  சொல்கிறார்கள்லுங்கி பருத்தி, பட்டு, செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அன்றைய நாட்களில் மஸ்லின் துணியால் நெய்யப்பட்ட லுங்கிகள் பாபிலோனுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகியிருக்கிறது. பாபிலோனை தொல்பொருளாராய்ந்த அறிஞர்கள் இதை ‘சிண்டு’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். மேலும் மீனவர்களான பரதவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் மெசபடோமிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் உலக வரலாறு சொல்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக லுங்கியில் கலர்ஃபுல் டிசைன்கள் போடப்பட்டுவருகிறது.

OBJECT வினா-விடை

வினா: இந்தப் படத்தில் இந்தச் சைகை என்ன சொல்கிறது?

A. வெற்றி பெற வாழ்த்துக்கள் B. ஒன்று C. ஐந்து D. Good
E. இவை அனைத்தும் F. இவற்றில் எதுவுமில்லைவிடை: E. ‘இவை அனைத்தும்’. ஆம் அந்தச் சைகை இவை அனைத்தையும் குறிக்கிறது.  இந்தச் சைகை உலகில் இடத்திற்கு இடம் மாறக்கூடியது. இதை ‘வெற்றி பெற வாழ்த்துக்கள்’ கூற கிரேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள். இத்தாலியர்களுக்கு இது ‘ஒன்று’. ஜப்பானியர்களுக்கு இது ‘ஐந்து’.

பொதுவாக மேல் நாட்டவர்களுக்கு இது ‘Good’.  அதேநேரம் நீங்கள் இது இவற்றில் எதுவுமில்லை என்று சொல்லியிருந்தாலும் சரியான விடைதான். காரணம், உலகின் எந்த நாட்டிலும் இல்லாமல் நம்ம ஊரில் மாத்திரம் இந்தச் சைகையை காட்டி ‘lift’ (தெரியாத மனிதரின் வாகனத்தில் பயணிக்க உதவி) கேட்க பயன்படுத்துகிறோம்.

ஐ.ஐ.எம்-ல் முதுநிலைச் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை!

இந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று இந்தூரில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனம். இதில் முதுநிலை சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வழங்கப்படும் படிப்பு: போஸ்ட் கிராஜூவேட் சர்டிபிகேட் புரோகிராம்  இன்ஃபினான்ஸ் (பி.ஜி.சி.பி.எஃப்.,) - ஓர் ஆண்டு காலம்.

தேவையான தகுதிகள்: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 2 ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.எப்.பி., போன்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு இந்த 2 ஆண்டு பணி அனுபவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எம்., இந்தூரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேரடியாகக் கல்வி நிறுவன முகவரிக்கே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.தேர்வு முறை: தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.3.2019.மேலும் முழுமையான விவரங்களுக்கு www.iimidr.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- தொடரும்

ஸ்நிவாஸ் பிரபு