ஏழாம் பக்க ஆரஞ்சுப் பாப்பா!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்கத்து ஜாரா கானிடம் காலியிடம் இருந்ததை கமெண்டு மூலம் உறுதி செய்த உங்களுக்கு எவ்வளவு நமஸ்காரம் செய்தாலும் தகும் சார்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வாட்ஸப் யுகத்திலும் கூட அச்சுப் பத்திரிகையின் சுவையை சூடாக சரோஜாதேவி பதில்கள் மூலம் உணர்கிறோம்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

ரொம்ப காலம் கழித்து கவர்ச்சியும், கவுச்சியுமில்லாமல் மங்களகரமாக ஒரு ‘வண்ணத்திரை’ அட்டை. பின்னட்டையும் ‘யூ/ஏ’ ரகம்தான்.
- முருகன், திருவண்ணாமலை.

டைட்டில்ஸ் டாக் பகுதியில் சந்தானபாரதி, அவர் குறித்து இதுவரை நாமறியா பல தகவல்களை சுவையாக பரிமாறினார்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

தமிழ்நாட்டுப் பசங்க தவிச்சிப் போய் கிடக்க ஏழாம் பக்க ஆரஞ்சுப் பாப்பாவை ஐரோப்பாவுக்கு அனுப்பும் உம்மை அனகோண்டா விழுங்க...
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

அழகுபொம்மை தமன்னா அடிதடி ராணி ஆகிறாரா? மீண்டும் கன்
ஃபைட் காஞ்சனாக்கள் காலம் திரும்புகிறது போலும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

குலோப்ஜாமூன் ஜீரா போல நடுப்பக்கத்தில் படு ஜோரா போஸ் தரும் ஜாராகானுக்கு அரோகரா!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.