ஜிம் கேர்ள் ஆகிறார் பூஜா!



அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தங்களது கிளுகிளுப்பான போட்டோக்களை போடும் நடிகைகளின் லிஸ்ட்டில் பூஜா ஹெக்டேவும் ஒருவராக இருந்தார். இடையில் தனக்கு படங்களின் வாய்ப்பு இல்லாமல்போனபோது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியும் பிகினி உடைகளிலும் போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் பூஜா ஹெக்டே. அவரது தீவிர முயற்சிகள் வீண் போகவில்லை.

 பாலிவுட்டில் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில் அக்‌ஷய்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடு வதை அவர் நிறுத்திக் கொண்டார். இந்தி சினிமாவில் மேலும் ஒரு படத்தில் ஜான் ஆப்ரஹாமுடன் நடிக்க பேசி வருகிறார்.

ரகுல் பிரீத் சிங்கும், பூஜா ஹெக்டேவும் சில மாதங்களாக நெருங்கிய நட்பில் இருக்கிறார்களாம். பட வாய்ப்புகளை இவர்கள் பகிர்ந்து கொள்வதாகவும் அதற்காக ஒருவரை ஒருவர் சிபாரிசு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே ரகுலைப் போல், ஐதராபாத்தில் ஜிம் ஒன்றைத் திறக்கவும் பூஜா திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக ரகுலிடம் அவர் ஆலோசனைகள் பெற்றிருக்கிறாராம்.

- ஜி