மாறுபட்ட அனுபவம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கேரளத்து குல்பி ரெபாமோனிக்கா ஜான் பேட்டி இனிமையாக இளமையாக இருந்தது. இனிக்கும் இளமை ஹீரோயின் நமக்கு கிடைத்து விட்டார். மீண்டும் ஒரு திறமையான அதிரடி வில்லன் ஹரீஷ்பேரடி சினிமாவிற்கு கிடைத்து விட்டார்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பல படங்களில் யார் இவர் என்று கவனிக்க வைத்த திலீபன், ‘போராளி’ என்கிற தலைப்பில் எழுதிய டைட்டில்ஸ் டாக், அவரை முழுமையாக அறிந்துகொள்ள உதவியது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

தமிழில் ஒரு ஜாக்கிசான் வரட்டுமே? சலிக்க சலிக்க ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வெகு காலமாயிற்று.
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

நடுப்பக்கத்து ஐஸ்வர்யா மேனனின் ஸ்டில்லுக்கு உங்க நிருபர் எழுதியிருக்கும் கமெண்ட் அபார கற்பனை.
- ராஜேஷ்குமார், நாங்குனேரி.

கதிர் எடுக்கப்போகும் ஜடாவதாரத்தைக் காண ஆவலாக காத்திருக்கிறோம்.
- ரமேஷ், நாமக்கல்.

முதல் படத்திலேயே படம் ரிலீஸ் ஆகுமா என்று இயக்குநரை தெறிக்கவிட்ட நிம்மிக்கு ரொம்ப ஓவர் கான்ஃபிடென்ஸ்தான்.
- குந்தவை, தஞ்சாவூர்.

சரோஜாதேவி பதில்களை வாசிப்பதே எங்களுக்கெல்லாம் மாறுபட்ட அனுபவம்தான்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.