மயக்கும் கருவி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அடிக்கடி எங்கள் சரோஜாதேவிக்கு லீவு விட்டுவிடுவதே உங்கள் வேலையாகப் போகிறது. சரோஜா இல்லாத வாரமெல்லாம் எங்களுக்கு சஹாரா பாலைவனமே.
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.

பாடகர் கிருஷ்ணராஜ் எழுதிய ‘பொற்காலம்’ என்கிற டைட்டில்ஸ் டாக் கட்டுரை, தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவுறுத்தியது.
- எம்.லோகு, திருவண்ணாமலை.

பள்ளி மாணவி தோற்றத்தில் தமிழில் அறிமுகமான மகிமா, இப்போது நல்ல வளர்ச்சியை எட்டியிருக்கிறார். ‘ஆர்யா மாறிட்டாரு’ என்று அவர் கொடுத்திருக்கும் சான்றிதழ் உண்மையாகத்தான் இருக்குமென்று நம்புவோம்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சிரஞ்சீவி குறித்த கட்டுரை அவரது வாழ்க்கையையே குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டியது.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

நடுப்பக்க மஞ்சக்குருவி நிஜமாவே மயக்கும் கருவிதான். மயக்கத்தில் இருந்து மீளவே இரண்டு நாள் ஆகிவிட்டது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

பின்னட்டை சஞ்சனாவைப் பார்த்ததுமே சந்தோஷம் பிச்சிக்கிச்சி...
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ குறித்த நடுநிலையான விமர்சனம், படம் பார்க்கத் தூண்டியது.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.