ஹவுரா பிரிட்ஜ்!சரோஜாதேவி பதில்கள்

* ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
பொண்ணுன்னா குணமும், தனமும் பெருசா இருக்கணும்னு கிராமத்துக் கிழவிங்க சொல்லுவாங்க.

* இயற்கை இளநீரை மறந்து, செயற்கை பானங்களுக்கு அலைவது சரியா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இளநீர் குடிக்கணும்னா மரத்துலே ஏறணுமே?

* கோடைக்கு ஏற்ற உடை?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பிறந்தநாள் உடை.

* ஆணுக்கு மீசை. பெண்ணுக்கு?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்).
ஹவுரா பிரிட்ஜ். புரியலையா? ‘தடம்’ பாருங்க.

* காமத்துக்கு முகமூடியா காதல்?
- கே.முருகன், திருவண்ணாமலை.
ஆமாம்னு உண்மையை சொன்னோம்னா ‘96’ ராம் அடிக்க வருவாரே?