தாராளமயம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கவர்ச்சி காண்பிக்க உடல் தேவையில்லை. உதடும், கண்ணுமே போதும் என்கிற ஆதிரா பாண்டிலட்சுமியின் கருத்து கச்சிதம்.
- என்.இன்பா, திருவண்ணாமலை.

டைட்டில்ஸ் டாக் பகுதியில் நடிகர் அபிசரவணன் மிக சிறப்பாக எழுதியிருந்தார். பட்டதாரி என்கிற சொல்லுக்கு பட்டுத் தெரிந்து கொள்வது என்று அவர் கூறிய விளக்கம் அருமை.
- சி.அப்பாஸ், பெரியகலையம்புத்தூர்.

நடுப்பக்க அஞ்சலியின் ஸ்டில்லுக்கு ‘தொடைதேர்தல் எப்போ வரும்?’ என்று கமெண்டு எழுதி அரசியல் சூட்டை கிளப்புறீங்களே தலைவா? நியாயமா?
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

இந்தியாவின் முதல் தாராளமய ஹீரோயின் ஜீனத் அமன் குறித்த தகவல்களும், படங்களும் கலக்கல் சார்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சினிமாவில் பாட்டு எழுத பயிற்சி தரும் பாடலாசிரியர் பிரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

அட்டையில் அதிதிமேனன், டைட்டில்ஸ் டாக்கில் அபிசரவணன். ஆனாலும் உமக்கு செம குறும்புய்யா.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தன் பாந்த நெஞ்சம் மூலம் ரசிக நெஞ்சங்களை அன்பால் ஈர்த்தவர் ஜீனத் அமன். கடைசிக் காலத்தில் கணவரை கண்ணும் கருத்துமாக கவனித்து, தன் இரு மகன்களையும் கரை சேர்த்து 68வது வயதில் தன் எதிர்காலம் பற்றி யோசிக்கும் அவரது நிலை நெகிழச் செய்தது.
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.