கபிலவஸ்து
விளிம்புநிலை வாழ்க்கை!
கழிவறையில் பணியாற்றும் ஹீரோ நேசம் முரளி, குப்பைக் கிடங்கில் பணியாற்றும் நந்தினியை காதலிக்கிறார். திருமணம் செய்துகொண்டு கெளரவமாக வாழ ஆசைப்படுகிறார்கள். கழிவறையின் பக்கத்தில் வசிக்கும் சிறுமி ஐஸ்வர்யா, எப்படியாவது வாடகை வீடு எடுத்து அதில் வசிக்க வேண்டும் என்கிற இலட்சியத்தில் இருக்கிறார். இந்த விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையே ‘கபிலவஸ்து’.
 ஹீரோவாக நடித்திருக்கும் நேசம் முரளி, கதைக்கு ஏற்ற முகமாகவே இருக்கிறார். இயல்பான நடிப்பால் சில இடங்களில் ரசிக்கவும் வைக்கிறார். நாயகி யாக நடித்திருக்கும் நந்தினி, கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார் சிறுமி ஐஸ்வர்யா.காந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். விஜியின் ஒளிப்பதிவு ஜாடிக்கேற்ற மூடி மாதிரி பட்ஜெட்டுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மாடுகளைக் காப்பாற்றக் கூட அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், சாலையோரம் வாழும் மனிதர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்பதை வசனங்கள் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கும் நேசம் முரளி, சாலையோர மக்களுக்காகக் குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
|