இலியானாகோவாதான் இலியானாவின் சொந்த ஊர். இங்கு நவீன பேஷன் ஆடைகள் ஷோரூம் வைத்திருக்கிறார். பேஷன் டிசைனிங் படித்த அம்மாவுக்காக இலியானா திறந்த கடை இது. வெளிநாடுகளுக்கு சென்றால் நவீன ரக ஆடைகள் மீதுதான் கண் போகுமாம். குறிப்பிட்ட ரக ஆடைகள் பிடித்துவிட்டால், அந்த ஆடைகளை தனது ஷோரூமுக்கு கொண்டு வந்துவிடுவார். நடித்தபடியே ஆடை பிசினசிலும் பிசியாக இருக்கிறார் இலியானா.
ஹன்சிகா மோத்வானிஹன்சிகாவுக்கு டாடூ என்றால் ரொம்பவே பிரியம். எல்லாமே விரும்பும் நேரத்தில் அழிக்கும் வகையிலான டாடூகளையே வரைவார். ஆனால் தனது கையில் மட்டும் எப்போதும் அழியாத டாடூ ஒன்றை பெயராக எழுதியிருக்கிறார். அது அம்மாவின் பெயர். முதுகு பக்கத்தில் தனக்கு பிடித்த ரோஜா மலரை டாடூவாக வரைந்திருக்கிறார். "அம்மாதான் எனக்கு எல¢லாமே. அதனால்தான் அவரது பெயரை அழியாதபடி டாடூவாக எழுதியுள்ளேன்" என்கிறார் ஹன்சிகா.
தமன்னாமகாலட்சுமி, வினாயகர் இருவரும்தான் தமன்னாவின் இஷ்ட தெய்வங்கள். தீபாவளி தினத்தில் மும்பையிலுள்ள மகாலட்சுமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்வது தமன்னாவின் வழக்கம். தனது படம் ரிலீசாகும்போதும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார். இதை முதல் படத்திலிருந்தே வழக்கமாக கொண்டிருக்கிறார் தமன்னா.
சமீரா ரெட்டிசமீரா ரெட்டிக்கு லயன் லேடி என்ற செல்லப் பெயர் உண்டு. அது அவரது சகோதரர் அவருக்கு வைத்த பெயராம். சிறு வயது முதலே ஆண் குழந்தைகளுடன் விளையாடுவது, முரட்டுத்தனமாக எல்லோரையும் போட்டு அடிப்பது, கோபப்படுவது என 'வீர தீர' பெண்ணாக வளர்ந்திருக்கிறார் சமீரா. சமீபத்தில்’தேஸ்’ ஷூட்டிங்கிற¢காக லண்டனில் பைக் ஓட்டும் காட்சி படமானது. 2 வாரத்தில் பைக் ஓட்ட கற்றுக் கொண்ட பின்பே நடிக்க வந்தார். இருந்தாலும் படபடப்பு காரணமாக பைக் ஓட்டும்போது, பலமுறை கீழே விழுந்து அடிபட்டதாக சொல்கிறார் சமீரா.
டாப்சிடாப்சிக்கு வாஸ்துவில் நம்பிக்கை அதிகம். மும்பையிலுள்ள தனது வீட்டை வாஸ்துப்படியே அவரது அப்பா கட்டியிருக்கிறாராம். ஐதராபாத்தில் தங்குவதற்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கும் வாஸ்துப்படியே அமைந்துள்ளதா என்றெல்லாம் பார்த்துதான் அந்த வீட்டில் குடியேறினாராம். நல்ல நாள் பார்ப்பது, நம்பர் நம்பிக்கை போன்றவற்றிலும் டாப்சிக்கு நம்பிக்கை அதிகம்.
ஜியா