கேட்கப்படாத கேள்விகள்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         சினேகாவிடம்

1.    அப்பாவின் ரியல் எஸ்டேட் பிசினஸ் எப்படி போகிறது?
2.    ஜவுளிக்கடை அதிபர் மகனை காதலிக்கிறீர்களாமே?
3.    அக்கா கிழித்த கோட்டை தாண்ட மாட்டீர்களாமே?
4.    திருமண வயது வந்துவிட்டதா? இல்லையா?
5.    தமிழ் மீடியாக்கள் மீது கோபம் ஏன்?
6. காக்கி சீருடை தான் மிகவும் பிடிக்குமாமே ? (சினிமாவில்தான்)
7.    அரண்மனை மாதிரி வீடுகட்டிவிட்டு அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பது ஏன்?
8.    ஜவுளிக்கடை, நகைக் கடை திறக்க சன்மானம் எவ்வளவு தர வேண்டும்?
9.    துபாயில் ஓட்டல் கட்டுவது உண்மையா?
10.    அக்காவுடன் சேர்ந்து தொடங்கும் புதிய பிசினஸ் என்ன?

த்ரிஷாவிடம்

1.    கிழக்கு கடற்கரை சாலையை விலைக்கு வாங்கும் எண்ணம் உள்ளதா?
2.    அப்பாவை எப்பவாவது நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
3.   உங்களுக்கு மார்க்கெட் போய்விடும் என்பதால்தானே உங்கள் அம்மா சினிமாவில் நடிக்கவில்லை?
4.    சிறந்த நடிகைக்கு ஜனாதிபதி விருது கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
5.     வெளிநாட்டுக்குச் சென்றால் எப்போதும் தண்ணியிலதான் (கடலில்) இருப்பீங்களாமே உண்மையா?
6.              ஆயில் மசாஜ் செய்து கொள்வது எங்கே?
7.               ஷவரில் குளிப்பது உங்களுக்கு பிடிக்குமா?
8.               கப்பலில் கமல் தமிழ் பேச கற்றுக் கொடுத்தாரா?
9.               உங்கள் ஆடை வடிவமைப்பாளர் ஆணா? பெண்ணா?
10.     இந்தி கான்களோடு நடிக்க நேரடியாக தூது போனீர்கள் தானே?

தங்கர்பச்சானிடம்

1.    வீட்டிலும் தூய தமிழில்தான் பேசுவீர்களா?
2.    வெளிநாட்டுக்குப் போனாலும் கூழும், இளநீரும்தான் சாப்பிடுவீர்களா?
3.    தமிழன் எப்படி இருப்பான்?
4.    சினிமாவில் நண்பர்கள் இருக்கிறார்களா?
5.    மேடையில் பேசுவதற்கு முன் ஒத்திகை பார்ப்பதுண்டா?
6.    நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டது பயத்திலா, பாசத்திலா?
7.    உங்கள் மகன் கான்வெண்டில் படிப்பது உண்மையா?
8.    பத்திரிகைகளை திட்டி பத்திரிகையிலேயே பேட்டி கொடுப்பது எப்படி?
9.    நல்ல சினிமா எப்படி இருக்கும்?
10.    ‘களவாடிய பொழுதுகள்’ எந்த ஆண்டு வெளிவரும்?


நயன்தாராவிடம்

1.    கடைசி  நாள் படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுததும் நடிப்பா? இல்லையா?
2.    சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி பற்றி படித்திருக்கிறீர்களா?
3.    இந்து மதத்துக்கு மாறியதற்காக கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டீர்களா?
4.    நீங்கள் எளிதில் காதல் வயப்படுபவர் என்கிறார்களே?
5.    டயானா குரியனாகவே (இயற்பெயர்) இருந்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறீர்களா?
6.  மீடியாக்கள் மீது உங்களுக்கு இருப்பது பொய் கோபம் தானே?
7.    திருமணத்திற்கு பிறகு நடிப்பதில்லை என்பது நீங்கள் விரும்பி எடுத்த முடிவுதானா?
8.    பிரபுதேவாவின் குழந்தைகள் உங்களை ‘சித்தி’ என்று அழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
9.    இன்னும் உங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்கள் பற்றி நிஜமாகவே என்ன நினைக்கிறீர்கள்?

சிம்புவிடம்

1.    விரல் வித்தையை கற்றுக் கொடுத்த குரு யார்?
2.    அப்பாவுக்கு நீங்கள் பயப்படுவீர்களா? உங்களுக்கு அப்பா பயப்படுவாரா?
3.    பக்கத்து தெருக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போடுவது ஏன்?
4.    ‘எஸ்.டி.ஆர்’ என்று பெயர் மாற்றிக் கொண்டது ‘எம்.ஜி.ஆர்’ ஆகலாம் என்ற நினைப்பிலா?
5.    தனுஷை சந்திக்கும்போது மனதுக்குள் என்ன நினைத்துக் கொள்வீர்கள்?
6.    அப்பா கட்சியில் உறுப்பினராகி விட்டீர்களா?
7.    ‘நான் அஜீத் ரசிகன்’ என்று சொல்லிக் கொள்வது அஜீத் ரசிகர்களை வளைத்து போடத்தானே?
8.      சம்பளத்தை எப்படி செலவு செய்வீர்கள்?
9.      சூப்பர் ஸ்டார் கனவு இப்போதும் வருகிறதா?
பைம்பொழில்
முகமது மீரான்