ரஞ்சித் இயக்கத்தில் அமீர்கான்?



கேட்டன் (Catan) என்ற போர்டு கேம் விளையாட்டில் அமீர்கான் கில்லாடி. அது அவரது ஃபேவரெட் ஹாபியும் கூட. அந்த விளையாட்டை கண்டுபிடித்த Klaus Teuber, சமீபத்தில் தான் எழுதிய ‘கேட்டன்’ குறித்த புத்தகத்தை அமீர்கானின் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். அவ்வளவுதான், ஆனந்தத்தில் திக்குமுக்காடிவிட்டார் அமீர்.

‘இந்த பர்த் டேவுக்கு வந்த கிஃப்ட்களில் இதுதான் பெஸ்ட் கிஃப்ட்’ என்கிறார்.‘காலா’ இயக்குநர் ரஞ்சித்திடம் அமீர்கான் ஓர் ஒன்லைனர் கேட்டு ஓக்கே செய்திருப்பதாக பாலிவுட்டில் பேச்சு. அனேகமாக ரஞ்சித்தின் அடுத்த படத்தில் அமீர்கான்தான் ஹீரோ. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரும்மாண்டமாக தயாரிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

- மைபா