டப்பு பார்க்கிறார் அனு!



‘துப்பறிவாளன்’ அனு இமானுவேலை நினைவிருக்கிறதா?

மொத்தமாக டோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அங்கிருக்கும் டாப் ஹீரோக்கள் அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ரவிதேஜா என்று வரிசையாக அனுவோடு ஜோடி போட்டு நடிக்கிறார்கள். அல்லு அர்ஜுனின் படம் தமிழில் ‘என் பெயர் சூர்யா’ என்று டப்பிங் ஆகி நல்ல வசூலைப் பார்த்ததில் சந்தோஷமாக இருக்கிறார்.

எப்போதுமே தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காதவர்கள், தெலுங்குப் பக்கமாக ஒதுங்கி, கிடைத்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு சம்பளத்தைக் கோடிகளுக்கு ஏற்றிவிட்டு தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுப்பது வாடிக்கை. தெலுங்கில் ஒப்பந்தமாகும் ஒவ்வொரு படத்துக்கும் சம்பள ரேட்டை அனு ஏற்றிக்கொண்டே போவதைப் பார்த்தால், அடுத்து தமிழில் அவரை நடிக்க வைக்க கோடி ரூபாயைக் கொட்டித்தான் தரவேண்டும் போலிருக்கிறது.

- ஒய்2கே