ஃபிளவர் ஒன்று புயலானது



மலையாளப் படம் ஒன்றில் அறிமுகமான அந்த நடிகை, பந்தாவுக்கு பேர் போனவராக இருக்கிறார். அவரது முதல்படத்தின் கேரக்டர் பெயர் ஃபிளவர். அந்தப் பேரிலேயே ரசிகர்களிடம் பிரபலமானார்.தொடர்ந்து மலையாளம், தெலுங்கில் ஹிட் படங்களில் நடித்தவர் தமிழில் அறிமுகமான முதல் படமே ஃபிளாப். இருந்தும் இரண்டு பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்களின் படப்பிடிப்பில் ஹீரோ, இயக்குநர் போன்றவர்களிடம் அலட்சியமாக நடந்துகொள்வது, படப்பிடிப்புக் குழுவினரிடம் எடுத்ததற்கெல்லாம் சண்டையென பேரை ரொம்பவே கெடுத்துக் கொண்டிருக்கிறார். புதிதாக கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சம்பளம் கேட்டு அதிர வைக்கிறாராம்.

‘ஏன் இப்படி முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறீர்கள்?’ என்று சக புதுமுக நடிகை ஒருவர் கேட்டபோது, ‘அவங்களைப் பத்தியெல்லாம் உங்களுக்குத் தெரியாது. இப்படி நெருப்பு மாதிரி நடந்துக்கிட்டாதான் நம்மளைத் தேவையில்லாமே தொந்தரவு பண்ணமாட்டாங்க’ என்றாராம்.
அட்ரா சக்கை!

- ரெட்ஒயின் ராகவன்