டாப்லெஸ் மனோகரி!



‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற ‘மனோகரி’ பாடலில் செம குத்து போட்டவர் வெளிநாட்டு மாடலான ஸ்கார்லெட் வில்சன். அந்தப் பாடலைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தியில் ஸ்கார்லெட்டுக்கு ஏகத்துக்கும் ஆஃபர்.இந்நிலையில் ஒரு போட்டோ ஷூட்டுக்காக ஸ்கார்லெட் மிகவும் தாராளமாக ‘டாப்லெஸ்’ போஸ் கொடுத்திருக்கிறாராம். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அந்தப் படத்தைப் பார்க்க தெலுங்கு ரசிகர்கள் இணையத்தில் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அதிரடி போஸ் காரணமாக ஸ்கார்லெட்டுக்கு திடீர் டிமாண்டு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களிலும் அவரை ஐட்டம் டான்ஸ் ஆடவைக்க இயக்குநர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எனினும் ஸ்கார்லெட் கேட்கும் தொகையைக் கேட்டு தலைசுத்தி மயக்கமாகிறார்கள்.

- கருப்பன்