ரீடர்ஸ் கிளாப்ஸ்!




திருவள்ளுவரின் ‘பிறன்மனை நோக்கா’ கொள்கையின்படி வாழ்ந்தாலும் நடுப்பக்க சமந்தாவைப் பார்த்ததுமே, கொள்கைக்கு லீவு விட்டுவிடலாமா என்று தோன்றிவிட்டது.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

அடுத்தாத்து அம்புஜங்கள் அனைத்துமே கோடையில் கொதிச்சிப் போய் கிடக்கிற எங்க மனங்களை குளிர்ச்சியாக்க வந்த ஜில் பானங்கள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

காணாமல் போன ஹாலிவுட் நடிகை, ஆப்பிரிக்காவின் ஜூலியா ராபர்ட்ஸ் என்று அயல்நாட்டு அழகிகளைப் பற்றி எழுதித் தள்ளிவிட்டீர்கள். உள்ளூர் ஸ்ட்ரைக் உங்களை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

சமந்தா காலைத் தூக்கிக்கொண்டு நிற்கிற நடுப்பக்க வண்ணப்படத்துக்கு ஆங்கிலத்தில் நீங்கள் அடித்திருக்கும் கமெண்டு சும்மா அள்ளிடிச்சி.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

காணாமல்போன ஹாலிவுட் நட்சத்திர மர்மத்தை திரில்லர் படமாகவே எடுக்கலாம் போலிருக்கிறதே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தமிழ் சினிமாவில் ‘ஒப்பனை’யின் இடம் என்னவென்பதை மிக அழகாக ‘பிலிமாயணம்’ தொடரில் எடுத்துக் காட்டியிருந்தார் பைம்பொழில் மீரான்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்

இயக்குநர் - நடிகர் த.முருகானந்தம் அவர்கள் ‘டைட்டில் டாக்’ வாயிலாக ‘கதாநாயகன்’ பற்றி சொன்ன விஷயங்கள் அபாரம்.
- குந்தவை, தஞ்சாவூர்.

‘டைட்டில்ஸ் டாக்’ தொடர், அடுத்த இதழில் வழக்கம்போல வெளிவரும்.