சினேகனுக்கு ஓவியா ஜோடி?ஓவியாவின் மார்க்கெட் இப்போது கன்னாபின்னாவென்று சூடு பிடித்திருக்கிறது. ஏராளமான தயாரிப்பாளர்கள் கட்டுக் கட்டான பணத்தோடு ஓவியாவின் கால்ஷீட்டுக்காக கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் மொத்தம் ஏழு கதைகளைக் கேட்ட ஓவியா, கவிஞர் சினேகன் நாயகனாக நடிக்கும் ‘பனங்காட்டு நரி’யைத்தான் டிக் செய்திருக்கிறாராம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சினேகனுக்கும், ஓவியாவுக்கும் இடையே ஏற்பட்ட உணர்வுபூர்வமான கெமிஸ்ட்ரி, இந்தப் படத்தில் பக்காவாக வெளிப்படும் என்று நம்பலாம்.

- நெல்லை பாரதி