ஓடிக்கிட்டே இருக்கணும் பாஸ்!கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து முடித்துவிட்ட விக்ரம், கொஞ்சம்கூட ஓய்வெடுக்க தயாரில்லையாம். “என்னோட பையனே எனக்கு போட்டியா நடிக்க வந்துட்டான். கொஞ்சம் சுணங்கினாகூட நம்மளைத் தாண்டி ஓடிடுவாங்க. ரெஸ்ட் எடுக்காமே ஓடிக்கிட்டே இருக்கணும் பாஸ்” என்கிறார்.

‘சாமி-2’ வேலைகளில் பிஸியாக இருப்பவர், உடனடியாக கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம். ராஜேஷ், கமல் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

- நெல்பா