மம்முட்டிக்கு மருமகளாகிறார் கீர்த்திசுரேஷ்!“நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘மகாநதி’ படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைத்த பாக்கியம்” என்று சிலிர்த்துப் போய் சொல்கிறார் கீர்த்திசுரேஷ். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது.

இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், ‘சாமி-2’, ‘சண்டக்கோழி-2’ என்று பிஸியாக இருக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘யாத்ரா’ படத்தில் மம்முட்டியின் மருமகளாக நடிக்கிறாராம்.

- நெல்லை பாரதி