ஓய்வறியா உழைப்பு!விஜய் சேதுபதி, தனக்கு பொருத்தமாக ஜோடி அமைந்தால் தொடர்ந்து அவர்களோடு பணிபுரிய விரும்புவார். அவ்வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர் போன்ற நாயகிகளின் பட்டியலில் இணைந்திருக்கிறார் மடோனா செபாஸ்டியன்.

விஜய் சேதுபதியோடு ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’ படங்களுக்குப் பிறகு ‘ஜூங்கா’விலும் இணைகிறார் மடோனா. சமீபத்தில் போர்ச்சுகல்லில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கொஞ்சமும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல், கடுமையாக உழைத்து படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளிவிட்டாராம்.

- நெல்லை பாரதி