எட்டு ரூபாய்க்கு எட்டா கனி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சுரேஷ்ராஜா தொகுத்து வழங்கும் ‘டைட்டில்ஸ் டாக்’ தொடரில் இத்தனை நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும், அவர்களது அனுபவங்களும் சினிமாவுக்குப் பின்னாலான வேறொரு உலகத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
- ராஜன், சென்னை-28.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் குறித்த இயக்குநர் வினோத்தின் ‘வண்ணத்திரை’ பேட்டியைப் பார்த்துவிட்டுதான் படம் பார்த்தேன். பேட்டியில் என்ன சொன்னாரோ, அதை படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

நடுப்பக்க மழையில் இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்டோம்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘சந்தானம், சும்மாவே இருக்க மாட்டார்!’ என்று வைபவி பேட்டிக்கு தலைப்பு இட்டவரை தூக்கி வேலூர் ஜெயிலில் போடவேண்டும். என்னவோ, ஏதோ என்று பதறிவிட்டோம்.
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.

எட்டு ரூபாய்க்கு எட்டா கனியை அட்டையிலே போட்டு எம்மையெல்லாம் ஏக்கப் பெருமூச்சில் வாடவிடும் உம்மை என்ன சொல்லி சபிப்பது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கிளாமர் குறித்து ரொம்ப ஜாக்கிரதையாக இந்துஜா பேட்டி கொடுத்திருக்கிறார். இன்னும் இரண்டு படங்கள் கழித்து, ‘கதைக்கு தேவைப்பட்டால்’ என்று கதைவிடத்தான் போகிறார்.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

பைம்பொழில் மீரான் எழுதும் ‘பிலிமாயணம்’ தொடர் வாரத்துக்கு வாரம் ஜோர்.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.