வடை போச்சே!



காமெடி புயலுக்கும், இம்சை இயக்குநருக்கும் மோதல் முட்டல் உச்சத்துக்கு வந்துவிட்டதாம். இருவருமே எப்படியாவது பெரிய வெற்றியை அடைந்தே தீரவேண்டும் என்கிற பதட்டத்தில் படத்தை பப்படமாக்கும் விதமாக ஒருவரின் வேலையில் மற்றவர் தலையிட்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்களாம்.

பஞ்சாயத்து, படத்தை தயாரிக்கும் பிரும்மாண்ட இயக்குநரிடம் போயிருக்கிறது. விசாரித்ததில், புயல்தான், இயக்குநருக்கு நிரம்ப டார்ச்சர் கொடுத்தது தெரியவந்திருக்கிறது. புயலிடம் சாலாக்காக பேசிப் பார்த்திருக்கிறார். ஒத்துவரவில்லை. எனவே, பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். பஞ்சாயத்து சுமுகமாக முடியாவிட்டால் புயலுக்கு ரெட்கார்ட் போடப்படலாம் என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.
படம், சும்மா கிளாமருக்கு...

- பிரின்ஸ்