அண்டா போணி ஆவுமா?ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ‘மேயாத மான்’ மூலமாக வந்திருக்கும் பிரியா பவானி சங்கர், நம்பிக்கை தரும் நடிகையாகத் தெரிகிறார். அவருக்கு பிரியாணின்னா உசுரு. எங்களுக்கு பிரியான்னா உசுரு.
- ராமரத்னம், ஆவடி.

உருட்டி புரட்ட ‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதிக்கு நீங்கள் போட்டிருந்த படம் டாப் தலைவா. பக்கத்தைப் புரட்ட மனசில்லாமல் அம்மணியை பார்த்துக்கிட்டே இருந்தேன்.
- முத்துகுமார், திருவாரூர்.

‘டோனி ரசிகருக்கும் ரஜினி ரசிகைக்கும் ரொமான்சு’ என்கிற உங்க தலைப்பே ‘பக்கா’வைப் பார்க்கத் தூண்டுகிறது. விக்ரம்பிரபுவுக்கு இதுவாவது திருப்புமுனையாக அமையட்டும்.
- குந்தவை, தஞ்சாவூர்.

‘எக்ஸ் வீடியோஸ்’ என்று படத்துக்குத் தலைப்பு வெச்சுட்டு போர்த்திக்கிட்டு நிக்கிற ஹீரோயினோட படத்தைப் போட்டா எப்படி? ஏதாவது கிளுகிளுப்பா அவிழ்த்துவிட்டாதானே அண்டா போணி ஆவும்?
- ராஜேந்திரன், சிந்தாதிரிப்பேட்டை.

நடுப்பக்கத்து பூமி வளர்ச்சிக்கு மீறி வெளைஞ்சு நிக்குது. வானம் பொழியோ பொழின்னு பொழிஞ்சிருக்கிறது நல்லாத் தெரியுது.
- அரவிந்தன், தேன்கனிக்கோட்டை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னக் கலைவாணர் விவேக்கின் விரிவான பேட்டியை வாசித்தது மகிழ்ச்சி.
- குண்டுமணி, கோத்தகிரி.

‘காதலிக்க ஆளில்லை’ என்று அம்சமான பையன் ஹரீஷ்கல்யாண் ஆதங்கப்படுவது நம்புறமாதிரியா இருக்கு?
- பவானி, நீலாங்கரை.

மும்பையில் தமிழர் பகுதியான தாராவி குறித்து ‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் விரிவாகப்3 பதிவு செய்த இயக்குநர் பவித்ரனுக்கு நன்றி.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.