அவள்பெட்ரூமில் பட்டையை கிளப்பும் மனைவி

சித்தார்த், ஆண்ட்ரியா இருவரும் காதலித்து கரம் பிடிக்கிறார்கள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது மாதிரி முக்கால்வாசி நேரம் இருவரும் பெட்ரூமுக்குள் உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த நிலையில் சித்தார்த்தின் எதிர்வீட்டுக்கு குடும்பத்துடன் குடியேறுகிறார் அதுல் குல்கர்னி. அங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. அதுல் குல்கர்னி வசிக்கும் வீட்டில் பல வருடங்களுக்கு முன் ஒரு சைனீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நிறைவேறாத ஆசையுடன் இறந்துவிடுகிறார்.

பழிவாங்கும் பேய் படமாகத் தொடங்கினாலும் அழகான திருப்பத்தை க்ளைமாக்ஸில் கொடுத்திருப்பது சிறப்பு. டாக்டர் வேடத்துக்கு சித்தார்த் கச்சிதம். ஆண்ட்ரியா அழகோ அழகு. பெட்ரூமுக்குள் நடக்கும் சில்மிஷக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். ஜென்னியாக வரும் அனிஷா விக்டர் நடிப்பில் பொளந்து கட்டுகிறார். பேபி ஆர்ட்டிஸ்ட் குஷி ஹஜாரே செம க்யூட்.

இசையமைப்பாளர் கிரீஷ், ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பலம் சேர்த்திருக்கிறார்கள். இயக்குநர் மிலிந்துடன் சேர்ந்து சித்தார்த்தும் கதை எழுதியிருக்கிறார். பேய்ப் படம் என்றாலே மொக்கை காமெடியாக இருக்கும் என்ற அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்திருக்கிறாள் ‘அவள்’. ஹேட்ஸ் ஆஃப் மிலிந்த்.