அஞ்சு கச்சேரி சாத்தியமா?சரோஜாதேவி பதில்கள்

* சன்னிலியோன், ஆணுறை விளம்பரத்தில் நடித்தது தவறா சரோ?
- ப.முரளி, சேலம்.
இதிலெல்லாம் சன்னியே நடிக்கத் தயங்கினால் வேறு யார்தான் நடிக்கமுடியும்?

* புத்தகம் - பெண் ஒப்பிடவும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இரண்டையுமே மெதுவாகப் புரட்டுவது நன்று. மீறினால் முந்தையது கிழியும். பிந்தையது சீறும்.

* பிறந்தநாளாகக் குளிக்கும் பழக்கமுண்டா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
சென்சாருக்கு பயந்து எப்படியெல்லாம் தமிழை வளைக்கிறீர்கள் வண்ணை...

* ஒரு நல்ல வித்துவானுக்கு ஒரே இரவில் ஐந்து கச்சேரிகள் சாத்தியமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
எப்பவோ ஒருமுறை என்றால் சாத்தியம். தினமும் அஞ்சு கச்சேரியென்றால், ஐசியூவில்தான் வித்துவானை அட்மிட் செய்ய வேண்டும்.

* காற்றைவிட வேகமாய் கண்டபடி அலையும் மனசுக்கு கடிவாளம் எது சரோ?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கண்ணை மூடிக்கொண்டு கைவலிக்கும் வரை கைதட்டுங்கள்.