இரவில் ஆண்கள்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

திரைப்படம் மட்டுமே பொழுதுபோக்கு என்று வாழ்ந்த ஒரு தலைமுறையின் பிரதிநிதியாய், பைம்பொழில் மீரான் எழுதும் ‘பிலிமாயணம்’, எழுபதுகளின் வாழ்வியலை மிகத்துல்லியமாக பதிவு செய்கிறது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

அதிகம் ஏமாறுவது ஆண்களா, பெண்களா என்கிற கேள்விக்கு சரோஜாதேவி தந்திருக்கும் ‘இரவில் ஆண்கள்’ என்கிற பதில் காலாகாலத்துக்கும் பொருந்தும்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

குல்பி ஐஸ் அர்த்தனாவின் பேட்டி அசத்தல். பிடித்த ஹீரோ யாரென்று கேள்விக்கு அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாக பதிலளித்தது மட்டும் ஏமாற்றம்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தமிழில் ஒரு அபோகலிப்டோவாக உருவாகும் ‘ஆறாம் வேற்றுமை’ கட்டுரையும் படங்களும் அபாரம். படத்தை உடனே காண ஆவல் அதிகரிக்கிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இடியே விழுந்தாலும் இதழுக்கு பன்னிரெண்டு கவர்ச்சிப் படங்கள் என்கிற வாக்குறுதியை மீறாத ‘வண்ணத்திரை’க்கு கோடானுகோடி நமஸ்காரம். நீங்கள் வெளியிடும் படங்கள் கண்ணுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, தேகத்திற்கு குளிர்ச்சி.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நடுப்பக்க அக்‌ஷிராகவுடா காய்த்த மரம் என்பது பார்த்தாலே தெரிகிறது. கண்ணடி மட்டும்தானா படும்?
- ராம.சுப்பிரமணியம், பம்மல்.

பல படங்களில் துணை பாத்திரமாக வந்தாலும் பளிச்சென்று தெரியும் நடிகர் பிரேமின் நீளமான பேட்டியை பிரசுரித்ததற்கு நன்றி. பெரிய நட்சத்திரங்களின் பேட்டிகளை மட்டுமே பத்திரிகைகள் வெளியிடும் போக்கிலிருந்து, சினிமாத்துறையில் சிறியளவில் பங்களிப்பு தந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் உழைப்பை மதித்து போற்றுவது எங்கள் ‘வண்ணத்திரை’ மட்டுமே.
- குந்தவை, தஞ்சாவூர்.
(சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம் தொடர், அடுத்த வாரம் வழக்கம்போல வெளியாகும்)