பாலிவுட்டின் பிளேபாய்!



‘ஜப் ஹாரி மெட் சேஜல்’ படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள், வசூல் தடுமாற்றம் பார்த்து ஷாருக்கான் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இனிமேல் கதையை சரியாக தேர்வு செய்ய தனி டீம் நியமிக்க யோசித்து வருகிறார்.

அனில்கபூரின் மகன் ஹர்ஷ்வர்தன் கபூர், மாடல் அழகிகளுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அவர்களுடன் நெருங்கி பழகி வருகிறாராம். பாலிவுட்டின் லேட்டஸ்ட் பிளேபாய் இவர்தான் என கிசு கிசு கிளம்பியுள்ளது.

நவாசுத்தீன் சித்திக் நடித்த ‘பாபுமஷாய் பந்துக்பாஸ்’ படத்தில் ஆபாச வசனங்களுக்காக 48 கட் கொடுத்துள்ளது சென்சார் போர்டு. கொதித்துப்போன பாலிவுட் டைரக்டர்கள், பிரஸ் மீட் வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.ஹிரித்திக் ரோஷனுடன் மீண்டும் இணைந்து வாழ பிரிந்து சென்ற அவரது மனைவி சூசன் ஆசைப்படுகிறாராம். ஆனால் அவரோ ஆஸ்திரேலியா மாடல் மெலினாவுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

- ஜியா