உப்புமூட்டை விளையாடலாமா?



சரோஜாதேவி பதில்கள்

* பெண்ணுக்கு மச்சம் எங்கிருந்தால் அழகு?
- ப.முரளி, சேலம்.
‘இச்’ கொடுக்கக்கூடிய எந்த இடத்தில் இருந்தாலும் கிக்குதான்.

* மனைவி பாராட்டும்படி நடந்துகொள்வது எப்படி?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
திருப்திப்படும்படி என்று கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பேன்.

* அதிகாலைக் கனவு பலிக்குமாமே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அத்தைப் பெண் கனவில் வந்தால் ஓக்கே. ஐஸ்வர்யா ராய் என்றால்? சாத்தியமான கனவு நிச்சயம் பலிக்கும்.

* உப்பு மூட்டை விளையாட உகந்த நேரம் எது?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
நீங்கள் நிமிர்ந்து நிற்கும் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த விஷயத்துக்கு நல்ல நேரமே.

* ‘ரெட்டைச்சுழி’ அதிர்ஷ்டமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மத்தியில் ரெட்டைச்சுழி என்று கற்பனை செய்யவே பயமா இருக்கே?