ஹீரோவுக்கு பாடமெடுத்த ஹீரோயின்!



‘பேகம் ஜான்’ படத்தில் பெண்களை வைத்து தொழில் நடத்துபவராக நடித்ததால், தான் ஆண்களின் கெட்ட பார்வைக்கு ஆளாகியிருப்பதாக மனசு வெறுத்துப் போய் சொல்கிறார் வித்யாபாலன்.

இந்திப் படம் ஒன்றில் பிரபுதேவாவுடன் வாய் பேசமுடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி வேடத்தில் தமன்னா நடிக்கிறாராம். இதற்காக சிறப்புப் பயிற்சி பள்ளியில் மாற்றுத் திறனாளிகளோடு பழகி நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொன்னபோது, அதற்கு கூடுதல் சம்பளம் கேட்டு அதிரவைத்திருக்கிறார் தமன்னா.

கருப்பர்கள் என்று தென்னிந்தியர்களை இழிவுபடுத்திய பாஜக தருண் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அபய் தியோல். அழகு க்ரீம் விளம்பரங்களில் சினிமா நட்சத்திரங்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவருடைய தங்கை இஷா தியோல் (ஹேமமாலினி மகள்) அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கிறாரே என்று பலரும் அபய் தியோலை திணறடித்துக்கொண்டிருக் கிறார்கள்.

‘டிரைவ்’ படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸைப் பார்த்து ஹீரோ சுஷாந்த் சிங் (‘டோனி’ படத்தில் நடித்தவர்) கண்ணடிக்க வேண்டும். அவருக்கு ஒழுங்காக கண்ணடிக்க வராததால், எப்படி ‘கிக்’காக கண்ணடிப்பது என்று ஜாக்குலினே சொல்லித் தந்தாராம்.

- ஜியா