மதமதக்கும் நெருப்பழகு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கிளுகிளுப்பான பதில்கள் தந்து எங்கள் மனசை கிறங்க வைத்தாலும், பாலியல் குற்றங்களுக்கு ‘கட் பண்ணிடணும்’ என்றுகூறி நடுங்கவைக்கும் சரோஜாதேவி, ஒரு வீரமங்கை என்பதில் சந்தேகமில்லை.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

சோகத்தை விரட்டியடிக்கும் சோனியாவின் கட்டழகு.. மோகத்தில் சூடேற்றும் மதமதக்கும் நெருப்பழகு.. மூடிவைக்காத முன்னழகை தேடிப்பிடித்துக் காட்டி.. வாடுகின்ற மனதுக்கு இன்பப் பாலூட்டி புகழ்சூடும் ‘வண்ணத்திரை’யே... பாடுகிறேன் வாழ்த்து உனக்கு!
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

அட்டையில் சுபிக்‌ஷாவின் குளோஸப் ஷாட்டும் அதற்குப் பொருத்தமாக ‘என் உதடு ஊறுகாயா உனக்கு’ என்கிற வாசகமும் கோடைவெயிலில் கிடைத்த குல்பி ஐஸாக ஜிலுஜிலுக்க வைத்துவிட்டது.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

அதிமேதாவிகள் காதலிக்க மாட்டாங்க என்பது உண்மைதான். ‘அதிமேதாவிகள்’ படத்தில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் காதலில் பாஸ் ஆவார்களா என்பதை பார்ப்போம்.
- ராமகிருஷ்ணன், கருங்குளம்.

மந்திராபேடி பற்றிய ‘ஹீரோயினிஸம்’ கட்டுரை அருமை. தன்னுடைய வாழ்க்கையையே சாகசப் பயணமாக மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நல்ல முன்னுதாரணம்.
- குந்தவை, தஞ்சாவூர்.

‘அங்கமாலி டயரீஸ்’ குறித்த ‘வண்ணத்திரை’ கட்டுரை, படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. படத்தை, படம் நடைபெறும் களத்தோடு இணைத்து நீங்கள் எழுதியிருந்த பாங்கு அருமை.
- முருகன், ராமநாதபுரம் (கோவை).

‘விருத்தாசலம்’ படத்தின் ஹீரோ நிஜத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார் என்கிற செய்தி வியப்பைக் கொடுத்தது.
- சந்தனத்தேவன், முதுகுளத்தூர்.