கூப்பிடுவதும் கும்பிடு போடுவதும்!




பிரபல இயக்குநர்களிடம் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு உட்கார்ந்து பாடம் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ தொடர்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

சஞ்சிதா ஷெட்டியின் படத்தை அட்டையில் நீங்கள் போட்ட முகூர்த்த நேரம், சுசிலீக்ஸ் வீடியோ மூலமாக அவர் ஓஹோவென்று புகழ் பெற்றுவிட்டார்.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

தேசத்துக்கு சேவை செய்து ஓய்வு பெற்றதோடு நின்றுவிடாமல் கலைச்சேவை செய்து மக்களை மகிழ்விக்கும் இராணுவ வீரர் அசோக் பாண்டியனுக்கு ஒரு ராயல் சல்யூட்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தெத்துப்பல் அழகி பாவனாவின் துணிச்சலுக்கு கிளாப்ஸ் போட்ட ‘ஹீரோயினிஸம்’ பகுதி கட்டுரை அருமை.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘பசங்களுக்கு கிக்கு ஏற்படுத்துவது எப்படி?’ என்று சஞ்சிதா கிளாஸ் எடுக்கிறார் என்று பரபரப்போடும் துடிதுடிப்போடும் வாசித்து சப்பென்று ஆகிவிட்டது. புகைப்படம் சுண்டி கூப்பிட்டது. பேட்டி கும்பிடு போட்டுவிட்டது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘முத்தம் என்பது டீஸர்.. அப்புறம் டிரைலர் படமெல்லாம் இருக்கே?’ என்கிற பதிலின் மூலம் மனிதவாழ்வின் தாம்பத்ய சுகத்தை சுருக்கமாக விவரித்துவிட்டார் சரோஜாதேவி.
- ராம்குமார், கோவை.

நீங்க அட்டையில் போட்ட யோகம், சஞ்சிதா காட்டில் அடைமழை போலிருக்கே?
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.