ரசிகர்கள் சில்மிஷம்!



படபுரமோஷனுக்காக டெல்லி சென்றபோது கூட்டநெரிசலை பயன்படுத்தி சில ரசிகர்கள் நர்கீஸ் பக்ரியிடம் சில்மிஷமாக விளையாடி விட்டார்களாம். இனிமேல் இதுபோன்ற புரமோஷன்களில் கலந்து கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார் நர்கீஸ்.‘டியர் ஜிந்தகி’ படத்தில் ஷாருக்குடன் நடித்ததைப் போல, சல்மானுடனும் நடிக்க விரும்புகிறார் அலியாபட். ‘நானே இன்னமும் சல்மானோடு நடிக்கவில்லை. அதற்குள் அலியாவுக்கு என்ன அவசரம்?’ என்று கடுப்படித்திருக்கிறார் தீபிகாபடுகோனே.

படவாய்ப்புகள் டல்லடிப்பதால் முன்னெப்போதோ பிகினியில் திரிந்தபோது எடுத்த படங்களை லீக் செய்திருக்கிறார் கேத்ரினா கைப். ‘இந்தப் பொண்ணு ஏன் இப்படி பண்ணுது?’ என்று கேத்ரினாவின் காதலர் ஆதித்யராய்கபூர் குடும்பத்தார் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.

சஞ்சய்தத் வாழ்க்கைக் கதையில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இதில் கெஸ்ட்ரோல் செய்ய அமீர்கான் மறுத்துவிட்டார்.  இத்தனைக்கும் இப்படத்தை இயக்கும் ராஜ்குமார் ஹிரானி, அமீர்கானின் நெருங்கிய நண்பர். அமீரை வைத்து ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ படங்களை இயக்கியவர்.

- ஜியா