டிஜிட்டல் அடிமைப்பெண்!



‘பாட்ஷா’வைத் தொடர்ந்து டிஜிட்டலில் கல்லா கட்ட வருகிறது ‘அடிமைப்பெண்’. 1969ல் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு ‘அடிமைப்பெண் - 2017’ என்கிற பெயரில் புதுசாக சென்ஸார் சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கிறார்கள்.

பழம் பெரும் நடிகை ஜி.சுப்புலக்ஷ்மியின் பேரன்களான பிரசாத், கணேஷ் சகோதரர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் இசையமைத்திருக்கிறார்கள்.

‘‘கே.வி.மகாதேவன் இசையில் வெளியான ஆறு பாடல்களுக்கு பழமையின் பெருமை மாறாமல் நவீன டிஜிட்டல் முறையில் பாடல்களை உருவாக்கியிருக்கிறோம்.  எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில் ‘அடிமைப்பெண்’ படத்திற்கு இசையமைத்ததை மாபெரும் பாக்கியமாகவே கருதுகிறோம்’’ என்கிறார்கள் இசை சகோதரர்கள் பிரசாத், கணேஷ். இப்போது, ‘கணபதி வந்தாச்சு’, ‘புதிய பயணம்’, ‘சில்க்குவார்பட்டி’, ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’, ‘கையில காசு இருந்தா’, இந்தியில் ‘பிரேம் திவானி’ உள்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்கள்.

- எஸ்