கடற்கன்னி டாட்டூ!:திரைமலர் சரம்!



எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்தை வைத்து 25 படங்களும், கமல்ஹாசனை வைத்து 10 படங்களும், சிவாஜிகணேசனை வைத்து 3 படங்களையும் இயக்கியிருக்கிறார்.

‘செம்மீன்’ ஷீலாவும், பிரேம் நசீரும் 107 படங்களில் ஜோடியாக நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்கள்.

நடிகர்களில் மேஜிக் கலை அறிந்தவர்கள் அபூர்வம். மறைந்த வில்லன் நடிகர் அலெக்ஸ் இதில் கில்லாடி. ஜீவாவுக்கு மேஜிக் செய்யத் தெரியும். சின்ன சின்ன கண்கட்டு வித்தைகளை செய்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின்களை அசத்துவார்.

கன்னட ஏரியாவில் கவர்ச்சியில் கரைதாண்டி பாய்கிறார் ஹரிப்ரியா. அவருடைய முதுகில் இடம்பெற்றிருக்கும் ‘கடற்கன்னி’ டாட்டூவை பார்க்க கன்னட ஹீரோக்கள் மத்தியில் அடிதடியாம்.

புத்தகம் எழுதுகிறார் தம்பி ராமைய்யா!

திரையுலகில் நீண்டகாலமாக பின்னணியில் இருந்தே போராடி, நடிகராக உயர்ந்து இன்று ரசிகர்களுக்கு பிரபலமாகி இருப்பவர் தம்பி ராமைய்யா. தன்னுடைய அனுபவங்களை ‘அனுபவ முகடுகள்’ என்கிற தலைப்பில் நூலாக எழுதி வெளியிடப் போகிறாராம். முதியோர்களுக்கு உதவுகிற வகையில் ‘தாய்மடி’ என்கிற பாதுகாப்பு இல்லம் தொடங்குவது குறித்தும் நண்பர்களோடு ஆலோசித்து வருகிறார்.

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ஒருமுறை பரிசளித்த பேனாவை பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து வைத்திருக்கிறார் பாக்யராஜ்.

நக்மா, ஜோதிகா, இனியா, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள்.

ஸ்டிக்கர் ஒட்டுகிறார் சந்தானம்!

சந்தானத்திடம் ஒரு வழக்கம் உண்டு. தான் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்கள் அத்தனையின் மீது ‘அம்மா - அப்பா’ என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார். பெற்றோர் மீது அவ்வளவு பாசம். கடந்த ஆண்டுதான் அவரது தந்தை காலமானார்.

இயக்குநர் பாலாவின் கழுத்தில் வித்தியாசமான ஒரு மாலையை கவனிக்கலாம். ‘நான் கடவுள்’ படப்பிடிப்புக்காக காசிக்கு போனபோது அங்கிருக்கும் அகோரிகள் கொடுத்த கபாலமாலையாம் இது.

சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னணிப் பாடகரும், நடிகருமான கிரிஷ், தன்னுடைய வலது கையில் சீனமொழியில் ஒரு டாட்டூ குத்தியிருக்கிறார். அந்த சீனவார்த்தைக்கு காதல் கடவுள் என்று அர்த்தமாம்.