(அக்)குறும்பு!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
அமலா குறித்த ‘ஹீரோயினிஸம்’ கட்டுரையில், ‘மாப்பிள்ளை’ படத்தில் க்யூட் பப்லியாக சூப்பர் ஸ்டாரோடு அவர் வலம் வந்ததையும் மீரான் அவர்கள் குறிப்பிட்டிருந்தால் முழுமையாக இருந்திருக்கும். - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
‘கத்தி சண்டை’ படத்தின் பலங்களை பாராட்டி, பலகீனங்களை குட்டி சினிமா விமர்சனத்தில் நடுநிலையான இதழ் ‘வண்ணத்திரை’ என்கிற பெயரை தக்கவைத்துக் கொண்டீர்கள். - அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.
சிறுவயதில் இருந்து விடமுடியாத பழக்கம் என்கிற கேள்விக்கு சரோஜாதேவி அளித்த பதில் செம (அக்)குறும்பு! - மணிவாசகம், சேந்தமங்கலம்.
எங்கக் காலத்து கனவுக்கன்னி அமலா குறித்த ‘ஹீரோயினிஸம்’ நினைவுறுத்தல் அருமை. தெலுங்கு ரசிகர்களுக்காக ரீ-என்ட்ரி கொடுத்த தகவலை கேள்விப்பட்டு கோபமடைந்தேன். தமிழ் ரசிகர்கள் என்ன பாவம் செய்தோம்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
டாப் 5 நடிகர்கள், நடிகைகள், படங்கள், இயக்குநர்கள் என்று நடுநிலை தவறாமல் பட்டியலிட்ட ‘வண்ணத்திரை’ வார இதழ்தான் சினிமா இதழ்களில் நெம்பர் 1 என்று வாசகர்கள் பட்டம் வழங்குகிறோம். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
வெங்கட்பிரபுவை சிறந்த இயக்குநராக ஊடகங்கள் எதுவும் முன்வைப்பதில்லை. அவருடைய முக்கியத்துவத்தை அறிந்து டாப் 5 பட்டியலில் சேர்த்த ‘வண்ணத்திரை’க்கு வந்தனங்கள். - குந்தவை, தஞ்சாவூர்.
‘வண்ணத்திரை’ என்கிற பெயருக்கு ஏற்ப இந்த இதழ் முழுக்க வண்ணங்களை வாரியிறைத்திருக்கிறீர்கள். புளோஅப்புகளும், அவைகளுக்கு கொடுக்கப்பட்ட கமெண்டுகளும் வாட்ஸப் யுகத்திலும் ‘வண்ணத்திரை’யை விரும்ப முக்கியமான காரணங்கள். - சலீம், துறைமுகம்.
|