பருவ காலத்து பூபாளம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சிம்பு ஜெனரேஷன் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் ஃபார்முலாவில் ‘ஆக்கம்’ கொடுத்து ஊக்கப்படுத்த நினைக்கும் இயக்குநர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
- ரவிச்சந்திரன், வேலூர்.

நடுப்பக்க எவரெஸ்ட் எட்டிவிடும் உயரத்திலா இருக்கிறது? கண்டதுமே எனக்கு கண் வேர்த்துவிட்டது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கீர்த்தி சுரேஷுக்கு போட்டி என்று மஞ்சிமா மோகனை முன்வைத்து சிண்டு முடிக்க நினைக்கும் ‘வண்ணத்திரை’யின் முயற்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மஞ்சிமாவின் அழகிய அட்டைப்படம் ‘கொஞ்சம் கொஞ்சும்மா’ என்று வாசகர்களைக் கோருகிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘படுக்கையறை போர்க்களமா?’ என்கிற கேள்விக்கு சரோஜாதேவி தந்த பதில் ஜென்தனமாக வியக்க வைத்து விட்டது. திரும்பத் திரும்ப அந்தப் பதிலை வாசித்து யோசனையில் ஆழ்ந்தேன்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

பருவ காலத்து பூபாளம். பக்கங்களை புரட்டப் புரட்ட இதயக்கடலில் இன்ப அலை. கட்டழகுத் தோணிகளை கட்டிப்போட்டிருக்கும் கடற்கரை, எங்கள் வண்ணத்திரை.
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

கதாநாயகி வாய்ப்பே வாழ்க்கையின் லட்சியம் என்று தன்னுடைய திறமையை குறுக்கிக் கொள்ளும் நடிகைகள் மத்தியில், பரதநாட்டியம் வாயிலாக தன்னுடைய உயிர்ப்பை தக்கவைக்கும் உத்ரா உண்ணி குறித்த ‘ஹீரோயினிஸம்’ கட்டுரை அருமை.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.