கண்ல காச காட்டப்பா



ஹவாலா ஆபத்து!

அரசு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நூறு கோடியை கொள்ளை அடிக்கிறார் ஓர் அமைச்சர். அதை மலேசியாவுக்கு ஹவாலா முறையில் அனுப்பி பதுக்க நினைக்கிறார். இந்தப் பணத்தை ஆட்டை போட நினைக்கிறார்கள் மூன்று கோஷ்டியினர். யாருக்கு வெற்றி என்பதே கதை.வெங்கட் பிரபு படங்களில் நாலு பேரில் ஒருவராக வரும் அரவிந்துக்கு ஹீரோ வேடம். கிடைத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார்.

இதுவரை குடும்பப் பாங்காக நடித்து வந்த சாந்தினி, தாராளமயமாக்கலுக்கு மாறியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு ஆகியோரின் காமெடி ஓக்கே. டான்ஸ் மாஸ்டர் கல்யாணின் நடிப்பு அவதாரம் நன்று.திவாகர் சுப்பிரமணியம் இசையில் பாடல்கள் பரவாயில்லை. அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவில் மலேசியாவின் அழகை ரசிக்க முடிகிறது. காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனத்தை நம்பாமல் நீட்டாக படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் மேஜர் கவுதம்.