புதுமாப்பிள்ளைகளின் மனங்கவர்ந்த இதழ்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சரோஜாதேவி பதில்கள் பகுதியில் கூழாங்கல் மீது அமர்ந்திருக்கும் பாறாங்கல் அழகியைக் கண்டதும், அந்த கல்லாக நான் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டேன்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

மஞ்சளைக் கண்டால் மாடுகள் மிரளுதோ இல்லையோ, நடுப்பக்க மஞ்சளழகியைக் கண்டு நாங்க மிரண்டுட்டோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ தொடர் எளிமையான நடையில், வலிமையான விஷயத்தை வாசகர்களுக்குத் தருகிறது.
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

புதுமாப்பிள்ளைகளின் மனசு கோணாமல் நடக்கும் பத்திரிகை நம்ம ‘வண்ணத்திரை’யே என்பதற்கு பளிங்குப் பாவைகளின் பளிச் பக்கங்களே சாட்சி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

அட்டைப்பட அழகி மானஸா, குடும்பப்பாங்கான தோற்றத்தில் ஆடிமாசத்து புதுமாப்பிள்ளைகளை ஏங்க வைத்துவிட்டார்.
- கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

Keep your eye on the ......... என்று வாசகத்தை நிறைவு செய்யாமல் சோனி சிறிஷ்டாவின் ஸ்டில்லில் கோடு போட்டு டென்ஷன் ஏற்றிவிட்டீர்கள். கோடிட்ட வெற்றிடத்தை பந்தால்தான் நிரப்ப வேண்டுமென்று கூகுள் செய்து பார்த்து தெரிந்துகொண்டேன். இவ்வாறாக என் பொதுஅறிவை வளர்க்கும் ‘வண்ணத்திரை’யே வாழ்க.
- ராமசேஷன், கருங்குழி.

என்ன அநியாயம்! குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் பகுதியில் வரும் பெண்கள் குறைந்தபட்ச ஆடைதான் அணிந்திருக்க வேண்டுமா?
- குந்தவை, தஞ்சாவூர்.