சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்கிறார் சமந்தா!



கல்யாண பிஸியில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தட்டிக் கழிக்கும் சமந்தா, சிவகார்த்திகேயன் பெயரை சொன்னதுமே ஒப்புக்கொண்டார் என்று ஆச்சரியப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணி, ஹாட்ரிக் கனவோடு மீண்டும் இணைகிறார்கள்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர சமந்தா சம்மதித்து விட்டார். தமிழில் சூர்யா, விஜய்... தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு என்று டாப்மோஸ்ட் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் சமந்தா, சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்வதின் மூலம் தமிழின் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனும் இருக்கிறார் என்பது சந்தேகமற உறுதிப்பட்டிருக்கிறது.

- யுவா