திண்ணையில் கிடக்கறவங்க தில்லானா ஆடுறாங்க!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

முன்னட்டையில் அழகுதேவதை அனுஷ்காவின் குளோசப் ஷாட் அருமையிலும் அருமை. அவர் கொடுத்திருக்கும் விரிவான பேட்டி புதுமையிலும் புதுமை.
- அ. சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.

‘ஓல்டு ஈஸ் கோல்டு’ செம ஜோரு. பழைய பஞ்சாங்கத்தைக் கிளறி திண்ணையில் கெடக்குறவங்களை தில்லானா ஆடவைக்கறீங்களே பாஸ்? என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா....?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.



ஆறு வித்தியாசங்களில் அடி பின்னுறீங்களே சார்? வைத்த கண்ணை எடுக்க முடியாமல் வீட்டுக்காரம்மாவிடம் மண்டகப்படி கிடைத்தது. இதற்காகத்தான் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தாலும், படகில் தாம்பரம் போய் ‘வண்ணத்திரை’ வாங்கினேன்.
- கிளாமர் கிருஷ்ணா, முடிச்சூர்.

படத்துக்கு சூட்டப்படும் பிரபலங்களின் பெயர்களை எங்களுக்காக ரூம் போட்டு யோசிச்ச தேவராஜுக்கு ஹேட்ஸ் ஆஃப்!
- குந்தவை, தஞ்சாவூர்.

‘குண்டானார் சோனாக்‌ஷி’ என்கிற தலைப்பில் தெரியுது உம்ம குசும்பு.
- ராமலிங்கம், நாமக்கல்.

சீர்காழி சிவசிதம்பரம் குறித்த கட்டுரை சிறப்பாக இருந்தது. வெண்கலக்குரல் வேந்தரின் மகனை கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிடித்ததில் ஆச்சரியமேதுமில்லை.
- ரவி, பாபநாசம்.

ரோமில் ரோமிங் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்த கவரேஜ் சூப்பர்.
- முத்துநிலவன், திருவனந்தபுரம்.