செக்ஸ் கல்விக்கு ஐஸ்வர்யா ராய் ஆதரவு!



தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரியாமணி, விரைவில் கன்னடப் படம் இயக்குகிறார். அதற்கான கதை தயாராக இருப்பதாக சொல்லியிருக்கும் அவர், இதில் சுதீப்பை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறாராம்.

‘செக்ஸ் கல்வி மிகவும் முக்கியம். அதை நம் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.



‘வாகா’, ‘வீரசிவாஜி’ படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் ஜி.தியாகராஜன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ‘சுந்தரபாண்டியன்’ எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.

மலையாளம் மற்றும் கன்னடத்தில் பாடியுள்ள மேக்னா ராஜ், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினால் மட்டுமே நடிகை என்ற அந்தஸ்தை தாண்டி, ஒரு நல்ல பாடகி என்ற அந்தஸ்தை அடைவேன் என்று சொல்கிறார்.

ரஜினிகாந்த் படங்களின் தலைப்புகளை பல இளம் ஹீரோக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விஷ்ணு சேர்ந்துள்ளார். எல்ரெட் குமார் தயாரிப்பில் அவர் நடிக்கும் படத்துக்கு ‘வீரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.