ப்யூட்டி சீக்ரட்ஸ் ஆஃப் தமன்னா!



கோதுமை நிறம். பார்த்தாலே கண்ணை கூசவைக்கும் பளிச் சருமம். சுண்டி இழுக்கும் பேரழகு. இதையெல்லாம் காக்டெயிலாகக் கலந்தடித்தால், அதுதான் தமன்னா. ‘பாகுபலி’ இளவரசியாக தென்இந்தியாவின் மோஸ்ட் வான்டட் நடிகையின் அழகு ரகசியம் என்ன?

உணவு

காலை நேர உணவு பிரட் சாண்ட்விச்சுடன் முட்டை ஆம்லெட். மதியம் சாதம், சிக்கன் குழம்பு. இரவு சப்பாத்தி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு. மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் தமன்னாவுக்கு சப்பாத்தி பிடிக்காதாம். அரிசி சாப்பாடுதான் பிடிக்குமாம். அதனாலேயே மதிய உணவில் அரிசி சாப்பாட்டை சேர்த்துக் கொள்கிறார். நடுவே ஒரு மணி நேரத்துக்கு காய்கறி சூப். எண்ணையில் பொரித்த ,வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சிறிது அளவு மட்டும் சாப்பிடுவது வழக்கம். மூன்று வேளை உணவை வயிறு முட்ட சாப்பிடாமல் குறைந்த அளவில் ஆறு வேளையாக பிரித்து சாப்பிடுவது இவரின் வழக்கம்.

அழகின் ரகசியம்:

* முகத்திற்கு சாதாரண சோப் போடாமல் மாய்ச்சரைசிங் சோப் போடுவதால், சருமம் வறண்டு போகாமல் இருக்குமாம்.
* ஷூட்டிங் லைட், வெயில், புழுதியில் நடிப்பதால், சருமத்தில் சீக்கிரம் சுருக்கங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்க கடலைமாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கும்.
* இரவு படுக்கும் முன் தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி, முடி கொட்டாமல் இருக்கும்.
* தலைமுடிக்கு ஷாம்பூ போடும் போது முடியில் நுனியில் அதிகம் போடக்கூடாது. இதனால் முடியின் நுனியில் வெடிப்பு ஏற்பட்டு, முடி கொட்டும்.



* தலைமுடியை குளிர்ந்த நீரில்தான் கழுவவேண்டும். இதனால் தலைமுடி வறண்டு போகாது.
* எந்த ஒரு பளிச் சருமத்துக்கும் நிம்மதியான தூக்கம் அவசியம்.
* நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனக்கு பிடித்த கவிதைகள் எழுதுவதால், மனது லேசாக இருக்குமாம்.
* சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிடணும்.
* டென்ஷனைக் குறைக்க பிடித்த படங்களை பார்க்கலாம்.
* ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மேக்கப் போடுவதை தவிர்த்து விடுவது, இரவு படுக்கும் முன் எந்த நேரமானாலும் மேக்கப்பை கலைத்து விட்டு படுப்பது.
* நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் பருகுவதால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

உடற்பயிற்சி

தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த குறிப்பட்ட நேரத்தில் ஓடுவது, உடற்பயிற்சி செய்வது அல்லது நடனமாடுவது என பல பயிற்சிகள் மேற்கொள்கிறார். உடற்பயிற்சி தமன்னாவுக்கு பிடிச்ச விஷயம் என்பதால், அதில் அதிக நேரம் செலவு செய்கிறார். நீச்சல் அடிக்கும் போது தமன்னாவும் கூலாவதால், அவருக்கு ரொம்ப பிடித்த உடற்பயிற்சி. கடைசியாக யோகா, தமன்னாவின் எ(இ)டையின் அழகை பராமரிக்கும் சீக்ரெட்.

உடைகள்

தமன்னா கல்லூரி நாட்களில் சுடிதார் தவிர வேறு எந்த உடையும் அணிந்ததில்லை. சினிமாவில் மிகவும் கிளாமராக இவர் உடை அணிவதைப் பார்த்த இவர் தோழிகள் ‘தமன்னாவா கிளாமராவா டிரஸ் போடுறா’ன்னு ஆச்சரியப்பட்டார்களாம். இடத்திற்கு ஏற்ப உடை என்பது தமன்னாவின் பாலிசி. விருது வழங்கும் விழா, கடை திறப்பு விழா போன்ற இடங்களுக்கு தமன்னாவின் ஆல் டைம் பேவரிட் புடவை. வீட்டில், நண்பர்களுடன் இருக்கும் போது ஜீன்ஸ், டி-ஷர்ட்.

-ப்ரியா