அசின் புறக்கணிப்பு! அபிஷேக் அதிர்ச்சி!



கேத்ரினா கைப் நடித்துள்ள ‘ஃபேன்டம்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை.

‘ஷோலே’ படம் 40வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவருமே ‘ஷோலே’ குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பட வாய்ப்பு இல்லாததால் அமிஷா படேல் மதுவுக்கு அடிமையாகிவிட்டாராம். பட விழாக்களுக்கு தள்ளாடியபடியே வருகிறாராம்.

ஹாலிவுட் சீரியல்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 3 சீரியல்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறார்.

திருமணம் செய்ய உள்ள அசின், ‘ஆல் இஸ் வெல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறாராம். ஹீரோ அபிஷேக் பச்சனும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.



சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு காஸ்டியூம் சென்ஸ் இல்லை என கடுமையாகத் தாக்கியுள்ளார் பிபாஷா பாசு.

‘சிங் இஸ் பிளிங்’ ஷூட்டிங்கில் மாஜி காதலன் பிரதீக் சந்திக்க வர, அவரைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டாராம் எமி ஜாக்சன்.

‘ஹீரோ’ படத்தில் புதுமுகம் சூரஜ்ஜுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க அப்பா சுனில் ஷெட்டியிடம் அனுமதி வாங்கினாராம் மகள் அதியா.

- ஜியா