தேவயானி எங்கே?



சினிமா, டி.வி என பிஸியாக இருந்தார் தேவயானி. இப்போது பகுதி நேர ஆசிரியையாக, சென்னையிலுள்ள ஒரு பெரிய தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறார்.



இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்கிறார்கள் (அப்படியா தேவயானி?). இதே பள்ளியில்தான் தேவயானி - ராஜகுமாரனின் மகள்களும் படிக்கின்றனர். இதற்கிடையே தேவயானிக்கு ஓரிரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

- தேவராஜ்