நாயகியில்லை ‘ஏ’!



முன்னணி இயக்குனர்களுக்கே இல்லாத துணிச்சல் புதுமுக இயக்குனர் திலீப்புக்கு வந்துள்ளது. கதாநாயகியே இல்லாமல் ‘குபீர்’ என்ற படம் எடுத்திருக்கும் இவருடைய துணிச்சலை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் வியந்து பாராட்டியுள்ளார்கள்.

ஆனால் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் தந்து அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறார்கள்.  “என்னுடைய படத்துல குத்துப் பாடல், முத்தக் காட்சி, வெட்டுக் குத்து இல்லை. ஆனால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அது ஏன் என்பது சஸ்பென்ஸ்.

நண்பர்கள் குழு வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அந்த இரவில் என்ன நடந்தது என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கேன்” என்கிறார் திலீப். புதுமுகங்கள் திலீப், ரவி, ஒயிட், தமிழ், பிரதாப், பிரபு இதன் நாயகர்கள். படத்தில் நண்பர்களாக நடிக்கும் அனைவரும் நிஜத்திலும் நண்பர்களாம். மதுரை தியாகராஜா காலேஜின் முன்னாள் மாணவர்களான இவர்களுக்கு சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாதாம்.

-ரா