குரல் His Mind Voice



பாசத்துக்குரிய தமிழர்களுக்கு இந்த பாட்டுப்பேரரசுவின் பைந்தமிழ் வணக்கம். ஆட்சிமொழி ஆணையத்தில் வேலைபார்த்தபோது அரசாங்கம் எனக்கு வழங்கிய மாதச்சம்பளம் 652 ரூபாய். அங்கேயே தொடர்ந்திருந்தால், வருமானவரி கட்டும் பாடலாசிரியர்களில் இந்தியாவிலேயே முதலிடம் என்ற தகுதி என் வாசலுக்கு வந்து சேர்ந்திருக்காது. பல்லவிக்கு பணம் கொடுப்பார்கள்; பரிசும் கொடுப்பார்களா? அந்த பாக்கியம் என் பாட்டு வரிகளுக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த மேகநிறக் கழுத்தில் மஞ்சள் நிறச் சங்கிலியை அணிவித்து, தமிழுக்குப் பெருமை சேர்த்தார் ஆருயிர் நண்பர் ரஜினிகாந்த். எரிமலைக்குழம்பில் செய்த எழுதுகருவியைக் கொடுத்து, என் விரல்களுக்கு விருதுபடைத்தார் முத்தம் உள்ளவரை இந்த மண்ணுலகம் மறக்காத இனிய நண்பர் கமல்ஹாசன்.

வாய்ப்பைப் பறிக்கிறான் வைரமுத்து என்று வாய் கிழியப் பேசுகிறார்கள் சிலர். எங்கிருந்து வார்த்தையைப் பறிக்கிறார் என்று புருவம் உயர்த்துகிறார்கள் பலர். 247 எழுத்துக்களையும் புறம்போக்கு நிலத்தில் கொட்டிவைத்திருக்கிறது தமிழ். யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக்கொள்ளலாம்; அனுமதி தேவையில்லை.

எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒன்றை குஷ்புவிடம் கண்டுபிடித்துத் தந்தது கன்னித்தமிழ். ஐஸ்வர்யா ராயைத் தூக்கிப்பார்த்து ஐம்பது கிலோ எடை என்று அகிலத்துக்கு அறிவித்தது அன்னைத்தமிழ்.

ஆறுவரிப் பல்லவிக்கு நூறுமுறை யோசிக்கிறேன் நண்பர்களே! ஆறுமுறை தேசியவிருது கொய்ததற்கு நான் நெய்த நெசவு நேர்த்தியானது. வருமானம் தராத எதையும் வைரமுத்து எழுதுவதில்லை என்று சிலர் சிக்கனமாகச் சிரிக்கிறார்கள். அப்படிப் பரிகாசிப்பவர்கள், தமிழின் கற்பைப் பரிசோதிப்பவர்கள்.

நெல்பா