நான் பெண்ணொன்று கண்டேன்



பஸ் ஸ்டாண்டில் கூலி வேலை செய்யும் அஸ்வின்ராஜ் பணக்கார வீட்டுப் பெண்ணை ஒருதலையாகக் காதலிக்கிறார்.  அகிம்சைவாதியாக இருக்கும் அஸ்வின்ராஜிடம், கத்தியை தூக்கினால் காதலி உனக்குத் தான் என்று காதலியின் சித்தப்பா வாக்கு கொடுக்கிறார். நாயகனுக்கு காதலி கிடைத்தாரா, இல்லையா என்பது பரபர க்ளைமாக்ஸ். மூட்டை தூக்கும் தொழிலாளியாக வரும் அஸ்வின்ராஜ் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கேரக்டரை மீறியும் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு சில இடங்களில் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியாதளவுக்கு நடிப்பை வாரி வாரி வழங்கியிருக்கிறார். நாயகி அனாமிகாவுக்கு அரைப் பக்கத்தை விட டயலாக் கம்மி என்பதால் வாய்ப்பும் கம்மியாகவே இருக்கிறது. அடாவடித்தனம் பண்ணும் ‘பேயக்கா’ மீனா, சித்தப்பாவாக வரும் யுக்திவேலுக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைப்பது உறுதி.

 அழகர் பொன்ராஜ் இசையில்  பாடல்கள் தாலாட்டுப் பாடுகின்றன; தாளம் போடவும் செய்கின்றன. சபீர் அலிகானின் ஒளிப்பதிவு கதைக்கு வலு சேர்க்கிறது. இயக்குனர் சஞ்சீவ் சீனிவாஸ் தெளிவாக கதை சொல்லி யிருந்தால் ‘பொன்’னை அனைவரும் கண்டு களித்திருப்பார்கள்.