தமிழ் செல்வனும் கலை செல்வியும்



பணத்துக்காக கொலை பண்ணுவதுதான் நாயகன் ராஜேஷின் சைடு பிசினஸ், மெயின் பிசினஸ். நாளொரு வண்ணம் பொழுதொரு கொலை என்று போய்க் கொண்டிருக்கும் ராஜேஷ் வாழ்க்கையில் நாயகி மிஸ்டு கால் மூலம் வருகிறார்.

 மிஸ்டு கால் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது. அந்த சமயத்தில் நாயகியின் போட்டோவைக் கொடுத்து ‘கொலை செய்’ என்று சொல்கிறார் ராஜேஷின் முதலாளி. ராஜேஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

ராஜேஷுக்கு ரவுடி ரோல். ஆனால் படம் முழுக்க அகிம்சையின் அண்ணன் போல் அடக்கி வாசித்திருக்கிறார். கலை அனாமிகா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். கேமராமேன் ராஜதுரை லட்சியத்துடன் படமாக்கியிருந்தால் காட்சிகள் கூடுதலாக மெருகேறி யிருக்கும். சந்திரா பார்ஸ் இசையில் பாடல்கள் ஓ.கே. இயக்குனர் பாண்டியன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தால் அனாவசியமான தொய்வை தவிர்த்திருக்கலாம்.