பாரதிராஜா இயக்கத்தில் ‘என் உயிர்த்தோழன்’ படத்தில் அறிமுகமானவர், தென்னவன். பிறகு சில படங்களில் நடித்தார். சொல்லிக்கொள்ளும் விதத்தில் அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், தடாலென்று படம் இயக்குவதாக அறிவித்துவிட்டார். மீனவர்களின் வாழ்க்கையையும், பிரச்னைகளையும் சொல்லும் படத்துக்கு ‘கோடிக்கரை’ என்று பெயரிட்டுள்ளார். ஸ்கிரிப்ட் எழுதிய அவரே முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
பிந்து மாதவிக்கு சென்னையை மிகவும் பிடித்துள்ளதாம். இங்கு வரும்போது தன் சொந்தக்காரர் வீட்டில் தங்கும் அவர், இப்போது ஐதராபாத்தில் வசிக்கிறார். தமிழில் ‘கழுகு’, ‘நீர்ப்பறவை’ படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து அதிக வாய்ப்புகள் கிடைத்தால், சென்னையிலேயே நிரந்தரமாக தங்குவாராம்.
அருள்நிதி நடித்த ‘மௌன குரு’வை இயக்கிய சாந்தகுமார், அடுத்து ஜீவாவை இயக்குகிறார். ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘முகமூடி’ படங்களுக்குப் பிறகு சாந்தகுமார் படத்தில் நடிக்கிறாராம் ஜீவா. இதுகுறித்து சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘ஜீவா, கார்த்தி இருவரில் ஒருவர் நடிப்பார். ஆனால், இப்போது ஸ்கிரிப்ட் வேலையை மட்டுமே முடித்துள்ளேன். யார் ஹீரோ என்பது முடிவாகவில்லை’ என்றார்.
மும்தாஜுக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் வீட்டில் ஓய்வு எடுத்ததில், உடல் எடை கூடிவிட்டார். வெளியிடங்கள், சினிமா விழாக்களுக்கு வருவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாத அவர், சில நாட்களுக்கு முன் பிலிம்சேம்பரில் நடந்த சினிமா ஸ்டிரைக் சம்பந்தமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரைப் பார்த்தவர்கள், ‘இது மும்தாஜ்தானா?’ என்று அதிர்ச்சியடைந்தார்களாம். எந்த கடையில் அரிசி வாங்கறீங்க மேடம்?
- தேவராஜ்.