“நம்புவீங்களானு தெரியாது. ஆனா, உதவி இயக்குநரா சினிமால சேரக் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கல. அதுக்காக நானும் சும்மா விடலை. தொடர்ந்து பத்து வருஷங்கள் மக்களோட மக்களா நின்னு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். ஸ்டில் போட்டோகிராபர், கேமிரா மேன், எடிட்டர்னு பல வேலைகளை பார்த்தேன். ஓரளவு டைரக்ஷன்னா என்னனு கத்துகிட்டேன். அதனாலதான் டென்ஷன் இல்லாம என்னால ஏ.பி.எம்.புரோடக்ஷன்ஸ் சார்புல மணி, ரங்கராஜ் தயாரிக்கிற ‘படம் பார்த்து கதை சொல்’ படத்தை இயக்க முடிஞ்சுது...’’ என்கிறார் இயக்குநர் பென்ஜமின் பிரபு.
‘‘பெரிய ரவுடிகிட்ட அடியாளா வேலை பார்க்கிற நாயகனுக்கு காதல் வருது. இந்தக் காதலுக்கு பிரச்னை இன்னொரு நாயகனால வருது. அடியாள் வேலையை விட்டுட்டு நல்லவனா மாற முயற்சிக்கிற நாயகன், கடைசில தன் காதலியை கட்டிகிட்டானா இல்லையானு பரபரக்கிற ஆக்ஷனோட சொல்லியிருக்கேன். நாயகனா தருண் சத்ரியாவும், நாயகியா ஷிகாவும் நடிச்சிருக்காங்க. முக்கிய வேடத்துல தர்ஷன் ஹாரிஸ் ஐசக் நடிக்கிறாங்க.
‘ரேனிகுண்டா’ கணேஷ் ராகவேந்திரா இசைல யூத்ஃபுல்லா அஞ்சு பாடல்கள் வந்திருக்கு...’’ என்கிறார் பென்ஜமின் பிரபு.
- எஸ்