எம்ஜிஆர் காலில்தான் அனைவரும் விழுவார்கள். ஆனால், இருவரிடம் மட்டுமே எம்ஜிஆர் ஆசி வாங்கியிருக்கிறார். ஒருவர், கத்திச் சண்டை மற்றும் இரட்டை வேடங்களில் அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த எம்.கே.ராதா. மற்றவர், இந்திப் பட இயக்குநர் சாந்தாராம். படத்தில் சாந்தாராம் காலில் விழுந்து வணங்குகிறார், எம்ஜிஆர்.
வேட்டி சட்டையில் மட்டுமே நாம் பார்த்த கவியரசு கண்ணதாசன், ஷாட்ஸ், டை, சட்டையில் எவ்வளவு அழகாக இருக்கிறார்..?
‘கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம்...’ என்ற பாடலின் வழியே இன்று வரை கடோத்கஜன் ஆக கொண்டாடப்படுபவர், எஸ்.வி.ரங்காராவ். குணச்சித்திர வேடங்களில் வெளுத்துக் கட்டிய இவர், நடனத்தையும் ஒரு கை பார்த்திருக்கிறார். அதுவும் நாட்டிய பேரொளி பத்மினியுடன். 1966ல் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ‘மோகினி பஸ்மாசுரா’ படத்தில் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடனமாடிய ஸ்டில்லைதான் இங்கு பார்க்கிறீர்கள்.
திருமண கோலத்தில் கவுண்டமணி..
“இல்லை... இல்லை... நீங்கள் பார்ப்பது குட்டி ‘ஃபுட்பால்’ இல்லை. அது மத்தியான சாப்பாடுக்குப் பின்னான ‘மேடம்’மின் வயிறு. அந்த சாப்பாடு கண்டிப்பாக திடமான உணவாகத்தான் இருக்க வேண்டும். நடனமாடுபவர்களுக்கு கண்டிப்பாக உணவு தேவைதான். ஆனால், பத்மினி போன்ற திறமையான டேன்சர்கள் கொஞ்சம் குறைவாக சாப்பிட்டு, கொஞ்சம் உடம்பை குறைத்தால் இன்னும் அழகாக இருக்குமே...’’ என்ற பத்மினியின் புகைப்படத்துக்கு கீழே எழுதியிருப்பவர் யார் தெரியுமா? பாபுராவ் படேல். இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட சினிமா பத்திரிகைன் ஆசிரியர் இவர்!
தமிழ் சினிமாவின் இசையுலக ஜாம்பவான்களான சீர்காழி கோவிந்தராஜன் (இடது), எம்.எஸ்.விஸ்வநாதன் (நடுவில்), டி.எம்.சவுந்தரராஜன் (வலது), ஆகியோர் தங்கள் மனைவிகளுடன்...
- ரவீந்தர், செங்கல்பட்டு.